Published : 31,Mar 2022 09:30 PM

லக்னோ பந்து வீச்சை துவம்சம் செய்த சென்னை பேட்ஸ்மேன்கள்: 210 ரன்கள் குவிப்பு

chennai-super-kings-batsmen-hammered-lucknow-bowlers-in-the-ipl-2022-league-match

நடப்பு ஐபிஎல் சீசனின் 7-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸை இழந்து முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 210 ரன்களை குவித்தது. அந்த அணிக்காக ருதுராஜ் மற்றும் உத்தப்பா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 

ருதுராஜ் மூன்றாவது ஓவரில் 1 ரன் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து களத்திற்கு வந்த மொயின் அலியுடன் மெர்சலான கூட்டணி அமைத்தார் உத்தப்பா. இருவரும் 56 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். உத்தப்பா 27 பந்துகளில் அரைசதம் விளாசி அவுட்டானார். மொயின் அலி 35 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். 

image

ஷிவம் தூபே மற்றும் ராயுடு 60 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ராயுடு 27 ரன்கள் எடுத்து அவுட்டானார். தூபே, லக்னோ பவுலர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவர் 30 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். 

கேப்டன் ஜடேஜா 17 ரன்கள் எடுத்தார். தோனி 6 பந்துகளில் 16 ரன்கள் எடுத்தார். லக்னோ அணி இந்த போட்டியில் வெற்றி பெற 211 ரன்கள் எடுத்தாக வேண்டும். ருதுராஜ், பிராவோ, பிரிட்டோரியஸ் தவிர்த்து சென்னை அணி பேட்ஸ்மேன்களின் ஸ்ட்ரைக் ரேட் 135-க்கு மேல் இருந்தது. லக்னோ அணி பவுலர்களில் ரவி பிஷ்னோய் அற்புதமாக பந்து வீசியிருந்தார். 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்