Published : 05,Sep 2017 05:57 AM
காஷ்மீரிலும் தொடரும் தலைமுடி வெட்டும் விநோதம்

பெண்களின் தலைமுடியை மர்மநபர்கள் வெட்டிசெல்லும் சம்பவம் ஜம்மு காஷ்மீரையும் விட்டுவைக்கவில்லை.
பெண்கள் தலைமுடியை வெட்டி செல்லும் விநோத சம்பவம் வட மாநிலங்களில் தொடர்ந்த வண்ணம் உள்ளது. டெல்லி, ஹரியானா, குஜராத், உத்தரப்பிரதேச மாநிலங்களில் நிகழ்ந்து வந்த இந்த சம்பவம், தற்போது ஜம்மு காஷ்மீரிலும் பரவியுள்ளது. ரஜோரி பகுதியில் வீட்டில் இருந்த பெண்ணின் தலைமுடியை யாரோ மர்ம நபர்கள் வெட்டி சென்றுள்ளனர். அந்தப் பகுதியில் நடக்கும் இரண்டாவது சம்பவம் இது. வட மாநிலங்களில், பெண்களின் தலைமுடியை வெட்டி செல்லும் சம்பவம் சில மாதங்களாக தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.