Published : 30,Mar 2022 04:19 PM

“இந்த சீசனில் விராட் கோலி 600+ ரன்கள் குவிப்பார் என நினைக்கிறேன்” - டிவில்லியர்ஸ்

virat-kohli-can-score-600-plus-runs-in-this-season-says-ab-de-villiers-ipl-rcb

2008 முதல் ஐபிஎல் அரங்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார் விராட் கோலி. இந்த சீசனில் அவர் அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் அவர் இந்த சீசனில் 600-க்கும் கூடுதலான ரன்களை சேர்க்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார் முன்னாள் ஆர்.சி.பி வீரர் ஏபி டிவில்லியர்ஸ். 

“இந்த சீசன் விராட் கோலிக்கு ஒரு ஆகச்சிறந்த சீசனாக இருக்கும் என நான் நினைக்கிறேன். டூப்ளசிஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் விராட் கோலி அழுத்தமின்றி இந்த சீசனில் விளையாடுவார். எப்படியும் இந்த சீசனில் அவர் 600+ ரன்கள் எடுப்பார் என நினைக்கிறேன். அதே நேரத்தில் இந்த சீசனில் பெங்களூர் அணியிலிருந்து சில இளம் வீரர்கள் லைம் லைட்டுக்குள் வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார் டிவில்லியர்ஸ். 

image

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களை குவித்த பேட்ஸ்மேன்களில் 6324 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார் கோலி. 2019 சீசனில் 464 ரன்கள், 2020 சீசனில் 466 ரன்கள், 2021 சீசனில் 405 ரன்கள் எடுத்துள்ளார் கோலி. நடப்பு சீசனின் முதல் போட்டியில் 41 ரன்கள் எடுத்திருந்தார் கோலி.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்