"ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறவும்" - அமெரிக்கா அறிவுறுத்தல்

"ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறவும்" - அமெரிக்கா அறிவுறுத்தல்
"ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறவும்" - அமெரிக்கா அறிவுறுத்தல்

ரஷ்யாவில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்கள் உடனடியாக வெளியேற அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது

உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போர் ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவிற்கு செல்வதை தங்கள் நாட்டு மக்கள் தவிர்க்கவேண்டும் என அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

ரஷ்யாவில் தங்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் , ரஷ்ய அதிகாரிகள் அமெரிக்க மக்களை கொடுமைப்படுத்த வாய்ப்புள்ளதால் இந்த அறிவுறுத்தலை தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புடின் அதிகாரத்தில் நீடிக்க கூடாது என அமெரிக்க அதிபர் பைடன் அண்மையில் கூறியிருந்தார். இதற்கு ரஷ்யா கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தது.ஆனால் புடின் குறித்து பேசியது தனது தனிப்பட்ட கருத்து என்றும் ரஷ்யா தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என பைடன் விளக்கம் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் அமெரிக்க அரசின் அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறதுRelated Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com