'என்னதான் நடக்குதுனு பார்ப்போம்' பெண்ணின் கூந்தலில் கூடு கட்டிய பறவை - சுவாரஸ்ய சம்பவம்

'என்னதான் நடக்குதுனு பார்ப்போம்' பெண்ணின் கூந்தலில் கூடு கட்டிய பறவை - சுவாரஸ்ய சம்பவம்
'என்னதான் நடக்குதுனு பார்ப்போம்'  பெண்ணின் கூந்தலில் கூடு கட்டிய பறவை - சுவாரஸ்ய சம்பவம்

பெண்ணின் கூந்தலில் பறவை ஒன்று கூடு கட்டி 84 நாட்களாக வாழ்ந்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் சூழலியாளரான ஹன்னா போர்ன்-டெய்லர், பறவைகள் பற்றில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது கூந்தலில் பறவை ஒன்று 84 நாட்களாக கூடு கட்டி வாழ்ந்த நிகழ்வை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் அவர்.

கடந்த 2018ஆம் ஆண்டின் ஒரு மழை நாளில், பிறந்து சில மணி நேரமே ஆன பறவைக் குஞ்சு ஒன்று, நிர்க்கதியாக தவித்துக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார் ஹன்னா போர்ன்-டெய்லர். அதன் தாய் பறவை எங்கேயாவது இருக்கிறதா என அவர் வெகுநேரமாக தேடிப்பார்த்த போது அது தென்படவே இல்லை. கண் கூடத் திறக்காத அந்தக் பறவை குஞ்சை இங்கேயே விட்டுச் சென்றால்  இறந்துவிடும் என்பதை அறிந்த ஹன்னா, அதனை தனது வீட்டு அறைக்கு எடுத்துச் சென்றார். அந்த பறவைக் குஞ்சு பறக்கத் தயாராக 12 வாரங்கள் ஆகும் எனத் தெரிந்துகொண்ட அவர், அதுவரை அந்த குஞ்சை, தானே பராமரிப்பது என முடிவெடுத்தார்.

இந்த நிலையில், பெரும்பாலான நேரங்களில் ஹன்னாவுடன் நெருக்கமாக இருந்ததால் அந்த பறவைக் குஞ்சு அவரின் கூந்தலில் கூடு கட்டத் தொடங்கியது. என்னதான் செய்கிறது என பார்ப்போம் என ஹன்னா அதனை தடுக்காமல் கூடு கட்டுவதற்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அருகில் கிடைத்த புல், இலை, சிறு குச்சி முதலியவற்றைக் கொண்டுவந்து கூடு கட்டி முடித்தது அந்த பறவைக் குஞ்சு. இதையடுத்து ஹன்னாவின் கூந்தலில் இருந்த கூட்டிலேயே அது 84 நாட்களாக வசித்து வந்தது. அதுவரை ஹன்னா தலைக்கு குளிக்கமால் சமாளித்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த பறவைக் குஞ்சு வளர்ந்து பெரிய பறவை ஆனது. அதன் இனப் பறவைகள் வெளியில் பறந்து திரிவதை கண்ட அப்பறவை, தனது கூட்டத்துடன் ஐக்கியமானது. அதன்பின் அந்த பறவை தனது அறைக்கோ, தனது கூந்தலில் கட்டியிருந்த கூட்டுக்கோ வரவேயில்லை எனத் தெரிவித்துள்ளார் ஹன்னா.

இதையும் படிக்க:  ஏலத்திற்கு வருகிறது உலகின் மிகப்பெரிய வைரக்கல்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com