ஈரோடு அருகே அரசு பள்ளி கழிவறையை மாணவ, மாணவிகள் கழுவும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த முள்ளம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு குறிப்பிட்ட அளவு மாணவ மாணவிகள் படித்துவரும் நிலையில் தலைமை ஆசிரியையாக மைதிலி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பள்ளி கழிவறையை 4ஆம் வகுப்பு மாணவன் மற்றும் ஒன்றாம் வகுப்பு மாணவி சுத்தம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதில் அச்சிறுவர்கள், தினமும் பள்ளிக்கு முதலில் வருபவர்கள் சுத்தம் செய்யவேண்டும் என ஆசிரியர்கள் கூறியதாகத் தெரிவிக்கின்றனர். சமூக வலைதளங்களில் பரவிய இவ்வீடியோவால் பள்ளிமேல் பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், விசாரணை முடிவிற்கு பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதே போன்று ஈரோடு மாவட்டம் பெரியூரில் கடந்த மாதம் மாணவர்களை தலைமை ஆசிரியை வண்ணம் அடிக்க சொன்னதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் பள்ளியில் மாணவர்கள் வேலை செய்வது போன்று வீடியோ வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai