“புடின் ஒரு கசாப்புக் கடைக்காரர்” - கடுமையாக சாடிய ஜோ பைடன்

“புடின் ஒரு கசாப்புக் கடைக்காரர்” - கடுமையாக சாடிய ஜோ பைடன்
“புடின் ஒரு கசாப்புக் கடைக்காரர்” - கடுமையாக சாடிய ஜோ பைடன்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனின் அண்டை நாடான போலந்து சென்றிருக்கிறார். அங்கு தலைநகர் வார்சாவில் பேசிய அவர், உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷ்யா வெற்றி பெறாது என்றார்.

அவர் பேசுகையில், மிகத்தீவிரமான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே, ரஷ்யா தனது நிலையை மாற்றும். உலக நாடுகள் நீண்ட நாள் போருக்கு தயாராக வேண்டும். ரஷ்ய அதிபர் புடின் பதவியில் நீடிக்கக் கூடாது. நேட்டோ என்பது தற்பாதுகாப்புக்கான அமைப்புதானே தவிர, ரஷ்யாவை அழித்தொழிக்கும் அமைப்பு அல்ல.

உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஒரு போதும் வெற்றி கிட்டாது. சுதந்திரமாக வாழ விரும்புவோர் இருளை விரும்புவதில்லை. ஜனநாயகம், சுதந்திரம், ஒளி, கண்ணியம், நம்பிக்கை ஆகியவை வேரூன்றிய ஒரு பிரகாசமான எதிர்காலம் நமக்கு உண்டு. கடவுளின் அருளால் அந்த மனிதர் அதிகாரத்தில் இருக்கக் கூடாது. கடவுள் நம் படைகளை பாதுகாப்பாராக” என்றார்.

முன்னதாக போலந்தில் உள்ள உக்ரைன் அகதிகள் மத்தியில் பேசிய அதிபர் பைடன், ரஷ்ய அதிபர் புடின் ஒரு கசாப்புக் கடைக்காரர்” என கடுமையாக விமர்சித்தார். அமெரிக்க அதிபரின் பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ள வெள்ளை மாளிகை, ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என பைடன் கூறவில்லை என்றும், அண்டை நாடுகள் மீது புடின் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்றே கூறியதாகவும் தெரிவித்துள்ளது. பைடனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்யா, “ரஷ்யாவை யார் ஆள வேண்டும் என்பதை அமெரிக்கா தீர்மானிக்க முடியாது. ரஷ்ய மக்கள்தான் புடினை அதிபராக தேர்ந்தெடுத்துள்ளனர்” எனக் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com