Published : 26,Mar 2022 09:11 PM
புனேவில் தீப்பிடித்து எரிந்த ஓலா இ-ஸ்கூட்டர்: விசாரித்து வருவதாக தயாரிப்பு நிறுவனம் தகவல்

புனேவில் ஓலா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் ஒன்று தீப்பிடித்து எரிந்த வீடியோ காட்சி வைரலாகி உள்ளது. அந்த வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவியுள்ளது. ஓலாவின் S1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த தீ விபத்தில் சேதமடைந்துள்ளதாக தெரிகிறது.
வணிக வளாகங்கள் நிறைந்த அங்காடி பகுதியின் சாலையோரத்தில் அந்த ஸ்கூட்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த ஸ்கூட்டரில் திடீரென புகை வெளியேறி உள்ளது. அடுத்த சில நொடிகளில் அது அப்படியே ‘மளமளவென’ தீ பற்றியுள்ளது. இதையடுத்து ஓலா நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
A @OlaElectric scooter starts burning out of nowhere in front of our society.
— funtus (@rochakalpha) March 26, 2022
The scooter is totally charred now.
Point to ponder.#safety#Pune
@Stockstudy8 @MarketDynamix22 @LuckyInvest_AK pic.twitter.com/C1xDfPgh6p
As summer arrives, it’s a real test for survival of #EV in India. #EVonFire#BatteryMalfunctionpic.twitter.com/Xxv9qS4KSu
— Saharsh Damani, MBA, CFA, MS (Finance) (@saharshd) March 26, 2022
“எங்களது பார்வைக்கு இந்த விபத்து தெரியவந்துள்ளது. புனேவில் நடைபெற்ற இந்த விபத்து குறித்து விசாரணையை தொடங்கி உள்ளோம். இதற்கான காரணத்தை அறிய முயற்சித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருடன் தொடர்பில் இருக்கிறோம். அவர் பாதுகாப்பாக உள்ளார்” என ஓலா தெரிவித்துள்ளது.