Published : 26,Mar 2022 05:47 PM
பிப்.14ல் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படங்கள்!

கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதியன்று EOS-04, INS-2TD மற்றும் INSPIRESat-1 செயற்கைக் கோள்களை விண்ணுக்கு செலுத்தி இருந்தது இந்திய விண்வெளி மையம் (இஸ்ரோ). தற்போது அதில் EOS-04 செயற்கைக்கோள் விண்ணிலிருந்து புகைப்படங்களை அனுப்பியுள்ளது. அதனை இஸ்ரோ புகைப்படைத்துள்ளது.
Here are the initial images received from EOS-04 and INS-2TD satellites launched last month.https://t.co/cpPRwSkdSU
விண்ணுக்கு கடந்த மாதம் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் அனைத்தும் அதன் பணிகளை சிறப்பாக செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில் EOS-04 செயற்கைக்கோள் ஒடிசாவில் உள்ள மகாநதி ஆற்றின் படத்தையும், இரண்டாவதாக கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி நதிக்கரையை படம் பிடித்து அனுப்பியுள்ளது.
படம்: ISRO