Published : 26,Mar 2022 04:27 PM

புதிய XPS 15, XPS 17 லேப்டாப்களை அறிமுகம் செய்த டெல் நிறுவனம்! சிறப்பம்சங்கள்

dell-launches-xps-15-and-xps-17-laptops-with-better-ram-and-chip

கணினி மற்றும் அது தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்து வரும் அமெரிக்க நிறுவனமான டெல் நிறுவனம் புதிதாக இரண்டு லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. XPS 15 மற்றும் XPS 17 ஆகிய மாடல்கள் தான் அவை. 12th ஜெனரேஷன் இன்டல் புராசஸிங் ஹார்டுவர், தண்டர்போல்ட் 4 மற்றும் DDR5 ரேம் மாதிரியானவற்றை கொண்டுள்ளது இந்த இரண்டு புதிய லேப்டாப்புகளும். 

i5, i7 மற்றும் i9 என மூன்று விதமான புராசஸர்களை கொண்டுள்ளது இந்த புதிய லேப்டாப். மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11 புரோ இயங்குதளத்தை இந்த லேப்டாப்கள் கொண்டுள்ளன. 

டெல் XPS 15 மாடல் 56WHr மற்றும் 86WHr என இரண்டு விதமான பேட்டரிகள் உடனும், XPS 17 மாடல் 97WHr பேட்டரி உடனும் வெளிவந்துள்ளது. வரும் 31-ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில நாடுகளின் சந்தையில் இந்த லேப்டாப் விற்பனைக்கு வர உள்ளது. XPS 15 மாடல் 1,10,550 ரூபாய்க்கும், XPS 17 மாடல் 1,41,050 ரூபாய்க்கும் விற்பனையாகும் என தெரிகிறது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்