“எல்லாப் போட்டிகளிலும் தோனி விளையாட வாய்ப்புள்ளதா?” - முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து!

“எல்லாப் போட்டிகளிலும் தோனி விளையாட வாய்ப்புள்ளதா?” - முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து!
“எல்லாப் போட்டிகளிலும் தோனி விளையாட வாய்ப்புள்ளதா?” - முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 12 ஐபிஎல் சீசன்கள் கேப்டனாக வழிநடத்தியவர் மகேந்திர சிங் தோனி. இந்நிலையில், அந்த பொறுப்பிலிருந்து அவர் விலகியுள்ளார். அதன் காரணமாக ரவீந்திர ஜடேஜா புதிய கேப்டனாக சென்னை அணியை இந்த சீசனில் வழிநடத்த உள்ளார். இந்நிலையில், 15-வது ஐபிஎல் சீசனில் சென்னை அணிக்காக தோனி எல்லாப் போட்டிகளிலும் விளையாட வாய்ப்புள்ளதா என்பது குறித்து தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தீப் தாஸ்குப்தா. 

“உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இது நான் எதிர்பார்த்த ஒன்றுதான். சென்னை அணி மெகா ஏலத்திற்கு முன்னதாக ஜடேஜாவை முதல் வீரராக தக்க வைத்து எல்லோரது கவனத்தையும் பெற்றிருந்தது. தோனி இந்த சீசனில் எல்லாப் போட்டிகளிலும் விளையாட வாய்ப்பில்லை என எனக்கு தோன்றுகிறது. இருந்தாலும் தோனி சென்னை அணியின் டிரஸ்ஸிங் ரூமில் மிகவும் முக்கியமானவராக இருப்பார். 

சென்னை அணியில் நீண்ட நாட்களாக பயணித்து வரும் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது. அவர் சக வீரர்கள் மற்றும் அணியினருடன் எளிதாக பேசுபவர். அணியின் மூத்த வீரர். சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட அனுபவம் கொண்டவர். அதனால் அவரை கேப்டனாக சென்னை அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது” என தெரிவித்துள்ளார் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தீப் தாஸ்குப்தா. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com