ரஷ்யாவில் சேவைகளை நிறுத்தும் “Spotify”

ரஷ்யாவில் சேவைகளை நிறுத்தும் “Spotify”
ரஷ்யாவில் சேவைகளை நிறுத்தும் “Spotify”

யூடியூப், மெட்டா நிறுவனங்களை தொடர்ந்து ஸ்பாடிஃபை ரஷ்யாவில் தனது சேவைகளை தற்காலிகமாக நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 30 நாட்களுக்கு போர் புரிந்து வரும் நிலையில், தனது நாட்டில் செயல்படும் சமூக ஊடகங்களுக்கு ரஷ்யா கடும் கட்டுப்பாடுகளை விதிக்கத் துவங்கியது. யூடியூப், மெட்டா (பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம்) மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப தளங்கள் அனைத்தும் ரஷ்யாவில் தங்கள் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தின. ரஷ்யாவின் புதிய கடுமையான சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் சிஎன்என் உட்பட பல செய்தி நிறுவனங்கள் தங்கள் பத்திரிகையாளர்களை ரஷ்யாவிலிருந்து வெளியேற்றின மற்றும் அந்நாட்டில் ஒளிபரப்புகளை நிறுத்தி வைத்தன.

மார்ச் மாத தொடக்கத்தில், ரஷ்ய பாராளுமன்றம் உக்ரைனில் நடந்து வரும் போரைப் பற்றிய "தவறான தகவல்" என்று அரசாங்கம் கருதுவதைப் சமூக ஊடகங்கள் மூலம் பகிர்ந்துகொள்வதை குற்றமாக்கும் சட்டத்தை இயற்றியது. இந்த சட்டம் பத்திரிகை மற்றும் பேச்சு சுதந்திரத்தை ஒடுக்குவதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் ரஷ்ய சந்தையை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஸ்பாட்டிஃபை நிறுவனம் அறிவித்துள்ளது. அடிப்படை சுதந்திரமான பத்திரிகையை தடை செய்யும் சட்டத்தை மேற்கோள் காட்டி தாங்கள் சேவையை நிறுத்தும் முடிவை எடுத்துள்ளதாக ஸ்பாட்டிஃபை தெரிவித்துள்ளது.

"ரஷ்யாவில் நம்பகமான, சுதந்திரமான செய்திகள் மற்றும் தகவல்களை வழங்குவதற்கு எங்கள் சேவையை செயல்படுத்த முயற்சிப்பது மிகவும் முக்கியமானது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சமீபத்தில் இயற்றப்பட்ட சட்டம், தகவலுக்கான அணுகலை மேலும் கட்டுப்படுத்துகிறது, சுதந்திரமான வெளிப்பாட்டை நீக்குகிறது மற்றும் சில வகையான செய்திகளை குற்றமாக்குவது Spotify இன் ஊழியர்களின் பாதுகாப்பையும், ஒருவேளை கேட்பவர்களையும் கூட ஆபத்தில் ஆழ்த்துகிறது" என்று Spotify செய்தித் தொடர்பாளர் கூறினார். இதையடுத்து ரஷ்யாவில் சேவையை நிறுத்திய சமூக ஊடகங்கள் பட்டியலில் தற்போது ஸ்பாட்டிஃபையும் இணைகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com