Published : 25,Mar 2022 03:12 PM
”ரசாயன கலப்படமற்ற இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றேன்” - தங்கர் பச்சான்

இயக்குநர் தங்கர் பச்சான் இயற்கை விவசாயம் செய்து வருவதை பெருமையுடன் பதிவிட்டிருக்கிறார்.
நடிகர் பிரகாஷ் ராஜ், கிஷோர், வெற்றிமாறன், குரு சோமசுந்தரம், பசுபதி, கருணாஸ் ஆகியோர் தங்கள் பொழுதுபோக்கு நேரங்களில் இயற்கை விவசாயமும் செய்து வருகின்றனர். அந்தப் பட்டியலில் இயக்குநர் தங்கர் பச்சானும் இணைந்திருக்கிறார். இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில், ”வீட்டுக்கான விளை பொருட்களை எங்களின் நிலத்திலேயே உற்பத்தி செய்து கொள்ளும் நோக்கில் ஒரு துளி கூட இரசாயன கலப்படமற்ற இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்றேன். உளுந்து அறுவடை முடிந்து நான்கு நாட்களில் நாட்டு வகை வேர்கடலை பிடுங்க உள்ளது.பத்து நாட்களில் சின்ன வெங்காயம் காத்திருக்கிறது” என்று பெருமையுடன் வயலில் இருக்கும் வீடியோவுடன் பகிர்ந்திருக்கிறார்.
வீட்டுக்கான விளை பொருட்களை எங்களின் நிலத்திலேயே உற்பத்தி செய்து கொள்ளும் நோக்கில் ஒரு துளி கூட இரசாயன கலப்படமற்ற இயற்கை வேளண்மையில் ஈடுபட்டு வருகின்றேன். உளுந்து அறுவடை முடிந்து நான்கு நாட்களில் நாட்டு வகை வேர்கடலை பிடுங்க உள்ளது.பத்து நாட்களில் சின்ன வெங்காயம் காத்திருக்கிறது. pic.twitter.com/ZgoDbkas0I
கடந்த 2017 ஆம் ஆண்டு ’களவாடிய பொழுதுகள்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் தங்கர் பச்சான் தன் மகன் விஜித் பச்சானை ஹீரோவாக அறிமுகமாக்கி ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தினை இயக்கி முடித்துள்ளார். பிஎஸ்என் எண்டெர்டைன்மெண்ட்ஸ் தயாரிக்க தரண்குமார் இசையமைத்துள்ளார். பிரபு - தயாளன் ஒளிப்பதிவு செய்ய தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.