புதுச்சேரியில் நடந்து முடிந்த காவலர் தேர்வில், ஆட்டோ ஓட்டும் இளைஞர் ஒருவர் தனது விடா முயற்சியால் தேர்ச்சி பெற்றுள்ளார்.
புதுச்சேரி ஜீவா நகரைச் சேர்ந்த கந்தன் என்ற இளைஞர் சிறு வயதிலிருந்தே காவலராக வேண்டும் என்ற ஆசையில் இருந்து வந்துள்ளார். ஆனால், குடும்ப வறுமையின் காரணமாக ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காவலர் தேர்வு தேதி அறிவிப்பு வெளியானதும், எப்படியாவது தனது கனவை நனவாக்க வேண்டும் என்பதால், ஆட்டோ ஓட்டிக்கொண்டே உடலை தகுதி செய்துக்கொண்டு , எழுத்து தேர்வுக்கும் தயரானார் கந்தன். பல்வேறு இன்னல்கள் வந்த சூழலிலும் தனது விடா முயற்சியால் உடல் தகுதி தேர்வில் தேர்வான அவர், அண்மையில் நடந்த எழுத்து தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தனது விடாமுயற்சியால் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதை சக ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 31 வயதாகும் கந்தனுக்கு திருமணமாகி ஒரு வயதில் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘வேட்டைக்காரன்’ படத்திலும் காவலர் கனவுடன் இருக்கும் விஜய் ஆட்டோ ஓட்டிக்கொண்டே தனது கனவுகளைத் துரத்தும் இளைஞராக நடிப்பில் கவனம் ஈர்த்திருந்தார். அதேபாணியில் வெற்றி பெற்றிருக்கும் கந்தன் ‘வேட்டைக்காரன்’ படத்தினை நினைவூட்டுகிறார்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai