Published : 02,Feb 2017 04:25 PM

பிரசவம் பார்க்க மறுத்த அரசு மருத்துவமனை? கவனகுறைவால் குழந்தை இறப்பு

kanjipuram-government-clinics-refused-to-treatment

கர்பிணி பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மறுத்ததால் காஞ்சிபுரம் மாவட்டம் வல்லிபுரத்தில் குழந்தை இறந்து பிறந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷினிக்கு பிரசவ வலி ஏற்பட்டதையொட்டி, வல்லிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால், செவிலியர்கள் வலி நிவாரணி மருந்து கொடுத்து சுபாஷினியை திருப்பி அனுப்பியுள்ளனர். வீடு திரும்பிய சுபாஷினிக்கு அங்கேயே குழந்தை இறந்து பிறந்துள்ளது. ஆத்திரமடைந்த உறவினர்கள் இறந்த குழந்தையின் உடலோடு சென்று, வில்லிபுரம் சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த சதுரங்கப்பட்டின சுற்றுவட்டார ஆரம்ப சுகாதார தலைமை மருத்துவர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கவனக்குறைவ‌க செயல்பட்ட செவிலியர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்