Published : 04,Sep 2017 08:44 AM

நவ.17க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

The-local-elections-should-be-held-by-November-17--High-Court-order

தமிழகத்தில் வரும் நவம்பர் 17ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகத் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள், உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது. இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், "உள்ளாட்சித் தேர்தலை வருகின்ற நவம்பர் மாதம் 17-ம் தேதிக்கு முன்பாக நடத்த வேண்டும். இந்தத் தேர்தலுக்கான அறிவிப்பை வருகின்ற 18-ம் தேதிக்குள் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்" என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்து 11 மாதம் கடந்து விட்டது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தொடர்ந்த வழக்கால் தள்ளிப்போனது. 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்