[X] Close

மேலும் 2 எம்.பிக்கள் தினகரனுக்கு ஆதரவு

Support-for-more-2-mp-Dhinakaran

முதலமைச்சர் பழனிசாமி மற்றும் தினகரன் தரப்பினர் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், 2 அதிமுக எம்.பி.க்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


Advertisement

அதிமுகவில் முதலமைச்சர் பழனிசாமி பதவி விலக வேண்டும் என தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதனால் பழனிசாமி மற்றும் தினகரன் தரப்பினர் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் வேலூர் தொகுதி எம்.பி. செங்குட்டுவன், திண்டுக்கல் தொகுதி எம்.பி. உதயகுமார் ஆகியோர் தினகரனின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர். 

பழனிசாமி அணியிலிருந்து 19 எம்.எல்.ஏக்கள் தினகரன் தரப்பிற்கு ஆதரவாக ஆளுநரிடம் கடிதம் அளித்திருந்தனர். இதைத்தொடர்ந்து புதுச்சேரி செல்லவில்லை என்றாலும் மேலும் 2 எம்.எல்.ஏக்கள் தினகரனிற்கு ஆதரவு தெரிவிப்பதாக வெளிப்படையாக கூறியிருந்தனர். இதுதவிர அதிமுக ஆதரவு கட்சிகளின் எம்.எல்.ஏக்களான தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோரும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் அப்போது தங்கள் ஆதரவு யாருக்கு என தெரிவிப்போம் என்று நடுநிலையான கருத்தை தெரிவித்துள்ளனர். இதனால் பழனிசாமி அணியின் எம்.எல்.ஏக்கள் பலம் 134ல் இருந்து 113ஆக சரிவடைந்திருந்த நிலையில், தற்போது அ.தி.மு.க எம்.பிக்கள் 37 பேரில், 2 பேர் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் எம்.பிக்களின் எண்ணிக்கையும் 35 ஆக குறைந்துள்ளது. எம்.பிக்களின் இந்த எண்ணிக்கை குறைவு அ.தி.மு.க பிராணமப் பத்திர தாக்கல் விவகாரத்தில் தினகரன் அணிக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close