Published : 21,Mar 2022 08:45 PM

விஜய் சேதுபதி - யுவன் ஷங்கர் ராஜாவின் ‘மாமனிதன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

actor-vijay-sethupathi-Maamanithan-release-on-may-month

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாமனிதன்’ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

‘விக்ரம்’, ‘மைக்கேல்’ உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி ‘மாமனிதன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நீண்ட நாட்களாக வெளியீட்டிற்கு தயாராக உள்ள இப்படத்தை ’பியார் பிரேமா காதல்’ வெற்றிக்குப்பிறகு யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணி நான்காவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளனர். இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் முதன்முறையாக இப்படத்திற்கு சேர்ந்து இசையமைக்கிறார்கள் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. விஜய் சேதுபதியுடன் காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

image

ஏற்கனவே, விஜய் சேதுபதி-சீனு ராமசாமி-யுவன் ஷங்கர் ராஜா இணைந்து பாராட்டுக்களைக் குவித்த ‘தர்மதுரை’ படத்தை நடிகர் ஆர்.கே சுரேஷ்தான் தயாரித்தார். அவரே இப்படத்தின் தமிழ்நாடு மற்றும் கேரளா உரிமையை கைப்பற்றியுள்ளார்.

இந்த நிலையில், ‘மாமனிதன்’ வரும் மே 6 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதே மே மாதம் ஆர்.கே சுரேஷின் ‘விசித்திரன்’ படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்