முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்று ஆஜரான நிலையில், நாளை காலை மீண்டும் ஓ.பன்னீர் செல்வத்திடம் விசாரணை தொடரும் என ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. இதுவரை ஓ.பி.எஸ்சிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 78 கேள்விகள் கேட்கபட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆணையத்தில் நீண்ட நாட்களாக ஆஜராகமல் இருந்து வந்த நிலையில், இன்று முதன் முதலாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓபிஎஸ் ஆஜரானார். இன்று மொத்தமாக மூன்றரை மணி நேரம் நடந்த விசாரணையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன. காலை மற்றும் பிற்பகல் நடந்த விசாரணையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் இதுவரை 78 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
இன்று நடந்த விசாரணையில், அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில் அண்ணா, எம்.ஜி.ஆர் போல ஜெயலலிதாவையும் வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என அப்போதய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் வேலுமணி ஆகியோரிடம் சொல்லி இருந்ததாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது, அப்பல்லோ மருத்துவர்களிடம் கலந்து பேசிய பிறகு வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து முடிவெடுக்கலாம் என சி.விஜயபாஸ்கர் சொன்னதாக கூறியுள்ளார்.
மேலும், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையின்போது சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை என்றும், தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்கும் வரை நான் அளித்த பேட்டியில் பேசியது அனைத்தும் சரியானதே என்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Loading More post
’காவல் நிலையத்தில் சித்ரவதை செய்ததால் என் மகன் தற்கொலை’ - நீதிமன்றத்தை நாடிய தாய்!
கிழிக்கப்பட்ட சட்டை.. ரத்த காயம்.. திமுக நிர்வாகி மீது தாக்குதல் - குன்றத்தூரில் பரபரப்பு
கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் - தமிழ் நடிகர், நடிகைகளில் இவர்கள் தான் டாப்!
காசிமேடு: கடலுக்குள் கவிழ்ந்த படகு.. நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்.. நடந்தது என்ன?
‘2012ல் ஷாரூக்கானிடம் இதற்காகத்தான் ஐபிஎல் வாய்ப்பை நிராகரித்தேன்’- ம.பி கோச் சந்திரகாந்த்
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix