Published : 21,Mar 2022 02:25 PM

லண்டனில் இந்திய வம்சாவளி மாணவி படுகொலை - வெளிநாட்டு இளைஞர் கைது

Indian-Origin-Woman-Murdered-In-Student-Flat-In-London-Tunisian-National-Arrested

லண்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அமைந்துள்ள மாணவர்களுக்கான தங்கும் விடுதி ஒன்றில் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவியான சபிதா தன்வானி (19) என்பவர் படுகொலை செய்யப்பட்டார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கொலை செய்யப்பட்ட சபிதா தன்வானியின் ஆண் நண்பரான தூனிசியா நாட்டைச் சேர்ந்த மகேர் மரூஃப் ( 22) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதேவேளையில், பாதிக்கப்பட்ட மாணவியின் தனியுரிமையை மதிக்குமாறு காவல்துறை அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

image

கொலை செய்யப்பட்ட சபிதா தன்வானி, அருகில் உள்ள லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தில் உளவியலில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 180 மாணவர்கள் தங்கும் அந்த 6 மாடி கட்டிடத்தில் கொலை செய்யப்பட்ட மாணவி 5வது மாடியில் தங்கி வந்துள்ளார். அதிகாலை 3 மணியளவில் மாணவி தங்கியிருந்த மாடியில் பலத்த சத்தம் கேட்டதாக சில மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட நட்பால் சிறுமிக்கு நேர்ந்த வன்கொடுமை

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்