Published : 19,Mar 2022 10:12 PM

செஸ் ஒலிம்பியாட்: சிறந்த லோகோ உருவாக்கினால் எவ்வளவு பரிசு தெரியுமா? - அசத்தல் அறிவிப்பு

Chess-Olympiad-Rs-75000-prize-for-best-logo-creation-Tamil-Nadu-Government

சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சிறந்த லோகோ உருவாக்கிக் கொடுப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை, தமிழக அரசு சென்னையில் நடத்தவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான லோகா, மேஸ்காட், டேக்லைன் உருவாக்க தேசிய அளவிலான போட்டியை தமிழக அரசு நடத்துகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

image

ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த வடிவமைப்பை அனுப்புவோருக்கு பரிசு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதல் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசாக 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்போர் தங்களது வடிவமைப்பை மார்ச் 26-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்