[X] Close

சென்னைக்கு ஹிட்… மற்ற மாவட்டங்கள் மிஸ்! - வாசகர்கள் கமெண்ட்ஸ் #LikeDislike

தமிழ்நாடு

Digital-debate-comments-about-TN-budget-2022--2023

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 18-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக "தமிழக பட்ஜெட் 2022-2023... ஹிட் என்ன? மிஸ் என்ன? " எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.

Nellai D Muthuselvam

மத்திய அரசு பட்ஜெட்டாக இருந்தாலும் , மாநில அரசு பட்ஜெட்டாக இருந்தாலும் சரி பொது துறை நிறுவனங்களை உருவாக்கி வருவாய் ஈட்ட நினைக்க மறுக்கிறார்கள்.
தமிழக அரசே தொழில் நிறுவனங்களை ஆரம்பிக்க தயங்கினால் யார் ஆரம்பிப்பார்கள்.
பாரம்பரியமாக பார்த்து வந்த குடும்ப தொழில்களை விட்டு முதல்தலைமுறையாக புதிய தொழில்களை தேர்ந்தெடுத்த இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள்.
பொறியாளர்கள் , திறன் படைத்த தொழிலாளர்கள் இருந்தும் தமிழக அரசு தொழிற்சாலைகளை அமைக்க தயங்குவது ஏன்.
குண்டூசி முதல் விமானம் வரை தயாரிக்க தமிழகத்தில் பொறியாளர்கள் இருக்கிறார்கள்.
சமூக திட்டங்களில் தலைசிறந்தது வேலைவாய்ப்புகளை அளிப்பது தான்.
பொது துறை நிறுவனங்கள் ஆரம்பிப்பது அரசுக்கும் , மக்களுக்கும் நன்மை தரக்கூடிய.
முதலீடு சார்ந்த வளர்ச்சி திட்டங்கள் அரசின் நேரடி வருமானத்தை அதிகரிக்க கூடியது.
சமூக நல திட்டங்களை செயல்படுத்த மாநில அரசு அதிக அக்கறை எடுத்து கொள்வது பாராட்டத்தக்கது.
அனைவருக்கும் அரசு மானியம் வழங்க தேவையில்லை. ஊக்கதொகை வழங்க தேவையில்லை.
தேவைப்படுபவர்களுக்கு எந்த பேதமின்றி வழங்கலாம்.
பொது பட்டியலில் கல்வி துறைக்கு மாநில அரசு பங்கு இருக்கிறது . பெரும் அளவில் பணம் செலவழிக்கப்படுகிறது.
மத்திய அரசின் பங்கும் கல்வி துறைக்கு தேவை.
மத்திய அரசு செயல்படுத்தும் கல்வி திட்டங்களுக்கு தேவையான வரியை தமிழகத்திலிருந்தும் செல்கிறது.
நவயோதயா பள்ளிகளை அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.
சற்று மத்திய அரசும் தனது பங்கை கல்வி துறைக்கு செய்ய விட வேண்டும்.
மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு தவிர்க்கவே கூடாது. அவர்கள் தலையில் நிதி சுமை விழும் எந்த வாய்ப்பையும் தமிழக அரசு இனி தவறவிட கூடாது.
குமரி கண்ட அகழ்வாய்வுக்கு தமிழக அரசு முன் முயற்சி எடுக்க வேண்டும்.


Advertisement

Anjali Geetha

மாணவர்களுக்கு கொடுக்கும் மடிக்கணினி திட்டத்தை ரத்து செய்து உள்ளார்கள் .....
தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்து உள்ளார்கள் ......
விலையிலா ஆடு மாடு கொடுக்கும் திட்டத்தை ரத்து செய்து உள்ளார்கள் .......
தாய்மார்களுக்கு கொடுத்த பரிசு பெட்டகம் திட்டத்தை ரத்து செய்து உள்ளார்கள் ......
மகளீருக்கு மானிய விலையில் கொடுக்கப்பட்ட ஸ்கூட்டி மானியத்தை ரத்து செய்து உள்ளார்கள் , அம்மா மினி கிளினிக் திட்டத்தை ரத்து செய்து உள்ளார்கள் .....
விற்பனை குறைவு என்று அம்மா உணவகத்தை எப்படி மூடலாம் என்று பார்க்கிறார்கள் .....
அம்மா வாட்டர் போன்ற திட்டத்தை ரத்து செய்து உள்ளார்கள் .....
200 ரூபாயில் கொடுக்கப்பட்ட அம்மா சிமிண்ட்டை மூடிவிட்டு 400 ரூபாய் வலிமை சிமிண்ட் என்று கொண்டு வந்து உள்ளார்கள் , அதுவும் இனி விலை உயரும் .

Karthick Raja

பெரும்பாலான திட்டங்கள் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே.

தென் மாவட்டங்கள்,மேற்கு மாவட்டங்களுக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் இல்லை.

கிழக்கு மாவட்டங்களில் (குறிப்பாக கடலோர ) மீனவர் நலன் சார்ந்த திட்டங்களும் இல்லை.

Advice Avvaiyar

நிறைய விஷயங்களில் ஹிட் தான். ஒன்றிரண்டு மிஸ் ஆனது வருத்தம்+ஓ.கே.நல்ல விஷயங்கள் பல நடக்கும் போது,மீதம் இருப்பவைகளுக்காக காத்திருப்பது+(1000ரூபாய்விட்டுக் கொடுப்பது தவறில்லை. )சொன்னவற்றை செய்து வரும் போது,மற்றவைகளையும் கண்டிப்பாக செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.போதுமே.

கார்த்தி Gounder

ஹிட் சென்னை...
மிஸ் மற்ற தமிழக மாவட்டங்கள்...

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close