Published : 19,Mar 2022 01:46 PM

இம்ரான் கான் ஆட்சி கவிழ்கிறதா? என்ன நடக்கிறது பாகிஸ்தானில்?

Pak-PM-Imran-Khan-Faces-Revolt-From-His-Own-Party-Ahead-Of-No-Trust-Vote

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக இம்ரான் கானின் சொந்த கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.  

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலுக்கும் அதிகரித்துவரும் பண வீக்கத்திற்கும் இம்ரான் கான் அரசே காரணம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதிக்க மார்ச் 21ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, மார்ச் 28ஆம் தேதி தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

image

இதற்கு மத்தியில், இம்ரான் கானின் சொந்த கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசுக்கு எதிராக திரும்பியுள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா ரியாஸ் கூறுகையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்த இம்ரான் தவறிவிட்டதாக குறிப்பிட்டார்.

இதையும் படிக்க: 'டெலிகிராம்' செயலிக்கு தடை - எந்த நாட்டில்? ஏன் தெரியுமா?

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்