மாணவி அனிதாவின் மரணம் நிச்சயம் ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும், நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் எதிர்பார்ப்புகள் என்னவாக இருக்கிறது என்பதை கேட்டறிய வேண்டும் என்றும் இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
சென்னையில் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்த அவர், “சமூகத்தில் யார் படிக்கலாம்? யார் படிக்கக் கூடாது? என்பதை முடிவு செய்ய மருத்துவக் கல்வி கொள்கை இருக்கிறது என நினைத்து பார்க்கும்போது மிகுந்த வேதனையளிக்கிறது. குழந்தை அனிதாவின் மரணம் நிச்சயம் ஈடு செய்ய முடியாத இழப்பு. அனிதா பெற்றுள்ள 1176 மதிப்பெண்களுக்கு பொதுப்பிரிவில் கூட இடம் கிடைக்க கூடிய தகுதி இருக்கிறது” என்றார்.
மேலும், “சமீபத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் உள்ளவர்களே இடஒதுக்கீட்டில் படிப்பதை எரிச்சலாக இருப்பதாக உணர்கிறார்கள். காரணம் என்னவென்றால், இடஒதுக்கீட்டில் தான் அவர்கள் படிக்கிறார்கள் என எளிமையாக பலரும் சொல்லிவிடுகிறார்கள். சமீபத்தில் முத்துக்கிருஷ்ணன் மரணத்தின் போதும் கூட, அவரது தங்கை கூறிய முதல் வார்த்தை என் அண்ணன் மெரிட்டில் தேர்வானான் என்பதே. அந்த அளவிற்கான நெருக்கடியை ஒடுக்கப்பட்ட மக்களிடம் இவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். அனிதாவும் இடஒதுக்கீடு இல்லாமல் பொதுப்பிரிவில் சென்றுவிட வேண்டும் என்பதற்காக இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு படித்து 1176 மதிப்பெண்கள் பெற்றிருக்கலாம். மாணவர்களின் எதிர்பார்புகள் என்னவாக இருக்கிறது என்பதை கேட்டறிய வேண்டும். இப்போதைக்கு மாணவர்களின் தேவையும் நீட் அவசியமில்லை என்பதே ஆகும்” என்று இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி