Published : 17,Mar 2022 06:00 PM
400 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டனுக்கு கொண்டு வரப்பட்ட நீர்நாய்கள் - ஏன் தெரியுமா?

பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு 400 ஆண்டுகளுக்குப் பிறகு நீர்நாய் ஜோடி கொண்டு வரப்பட்டுள்ளது.
தோல் மற்றும் மாமிசத்திற்காக வேட்டையாடப்பட்டு வந்த நீர்நாய்கள், 16 ஆம் நூற்றாண்டிலேயே பிரிட்டனில் இல்லாமல் போயின. தற்போது 400 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் என்பீல்டு பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ள 2 வயது ஆண் மற்றும் பெண் நீர்நாய்கள் பாதுகாக்கப்பட்டு இனப்பெருக்கம் ஏற்பட்டதும் அவற்றை நீர்நிலைகளில் விட திட்டமிடப்பட்டுள்ளது.
நீர்நிலைகளின் கரைகளில் மண்ணால் மேடு எழுப்பி மரங்களின் வேர்களைக் காக்கக்கூடிய நீர்நாய்களால், வெள்ள அபாயம் தவிர்க்கப்படுவதாக உயிரின ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.