இந்திய சந்தையில் லாவா Z3 ஸ்மார்ட்போன் அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்ன?

இந்திய சந்தையில் லாவா Z3 ஸ்மார்ட்போன் அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்ன?
இந்திய சந்தையில் லாவா Z3 ஸ்மார்ட்போன் அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்ன?

இந்தியாவின் பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ‘லாவா’ ஸ்மார்ட்போன், கணினி என பல எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில் ‘Z3’ என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது லாவா. என்ட்ரி லெவல் செக்மெண்ட் போனாக Z3 அறிமுகமாகியுள்ளது. 

சிறப்பம்சங்கள்!

மீடியாடெக் ஹீலியோ A20 புராசஸர், 6.5 இன்ச் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, 8 மெகாபிக்சல் டியூயல் ரியர் கேமரா, 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, பின்பக்கத்தில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், டைப் ‘C’ போர்ட், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மாதிரியானவற்றை இந்த போன் கொண்டுள்ளது. 

இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த போன் 7,499 ரூபாய் என்ற விலையில் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com