திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் மற்றும் சென்னை கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை ஆழித்தேருக்கு உண்டு. பங்குனி பெருவிழாவையொட்டி இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் தேரோட்டம் தொடங்கியது. ஆரூரா, தியாகேசா என விண்ணதிர முழக்கமிட்டபடி பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர். இதனால் திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திருவாரூர் வீதிகளில் ஆழித்தேர் அசைந்தாடி வரும் அழகை தரிசிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
ஆழித்தேரை தொடர்ந்து அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் தேரோட்டமும் நடைபெறுகிறது. இதேபோல சென்னை கபாலீஸ்வரர் கோயிலிலும் பங்குனி பெருவிழா தேரோட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 9ஆம் தேதி கொடியேற்றப்பட்டு, முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. நூற்றுக்கணக்கான மக்கள் மாட வீதிகளில் கூடி, தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தேரோட்டம் காரணமாக கோயிலை சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளிலும் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்