
உக்ரைன் ரைவ்னே நகருக்கு வெளியே தொலைக்காட்சி கோபுரம் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள ரைவ்னே நகருக்கு வெளியே அமைந்துள்ள தொலைக்காட்சி கோபுரம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 9 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டோபில் கிராமத்தில் இடிபாடுகளிடையில் சிக்கிக்கொண்டிருப்போரை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அந்த பிராந்திய தலைமை நிர்வாகி கூறியுள்ளார். தொலைக்காட்சி கோபுரம் மீது இரண்டு ஏவுகணைகள் அதிகாலை நேரத்தில் ஏவப்பட்டதாகவும் இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாவும் அவர் கூறினார்.
ரஷ்யாவின் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள டான்பாஸ் பகுதியில் தொடர்ந்து கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. இதில் 100 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 6 வாகனங்கள் சேதமடைந்ததாவும் உக்ரைன் படைகள் சார்பில் கூறப்படுகிறது. எனினும் இதை ரஷ்ய தரப்பு உறுதி செய்யவில்லை.
இதற்கிடையில் ரஷ்யா போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாக உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நாளை மார்ச் 16 அன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.