கொரோனா இழப்பீடு பெற போலிச் சான்றிதழா? - நீதிபதிகள் வேதனை

கொரோனா இழப்பீடு பெற போலிச் சான்றிதழா? - நீதிபதிகள் வேதனை
கொரோனா இழப்பீடு பெற போலிச் சான்றிதழா? - நீதிபதிகள் வேதனை

கொரோனா இழப்பீடு பெறுவதற்காக போலிச் சான்றிதழ் வழங்கும் அளவுக்கு நமது ஒழுக்கம் தாழ்ந்து போகும் என ஒருபோதும் நினைத்ததில்லை என உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் மரணமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் கொரோனா இழப்பீடு பெறுவதற்காக பலர் மருத்துவர்களிடம் இருந்து போலியாக சான்றிதழ் பெற்றுத் தருவதாக புகார்கள் வந்துள்ளதாக மத்திய அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள் இழப்பீடு பெறுவதற்காக போலி சான்றிதழ் வழங்கும் அளவுக்கு நமது ஒழுக்கம் தரம் தாழ்ந்து போகும் என ஒரு போதும் நினைத்ததில்லை என வேதனை தெரிவித்தனர். இது குறித்து கணக்கு தணிக்கை அதிகாரி அலுவலகம் மூலம் விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்புள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் கொரோனாவால் இறந்த ஒருவரின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவே தாங்கள் உத்தரவிட்டிருந்ததாகவும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது தங்கள் உத்தரவு இல்லை என்றும் நீதிபதிகள் விளக்கம் அளித்தனர். இதுதொடர்பாக மத்திய அரசு தனியாக மனு ஒன்றை தாக்கல்செய்ய அறிவுறுத்திய நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com