100 குண்டுகள்... ரஷ்யா தாக்குதலில் மரியுபோல் நகரில் 2,100 பேர் உயிரிழப்பு

100 குண்டுகள்... ரஷ்யா தாக்குதலில் மரியுபோல் நகரில் 2,100 பேர் உயிரிழப்பு
100 குண்டுகள்... ரஷ்யா தாக்குதலில் மரியுபோல் நகரில் 2,100 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவின் தாக்குதலில் மரியுபோல் நகரில் மட்டும் இதுவரை 2,100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக தலைநகர் கீவ், மரியுபோல், லிவிவ் நகரங்களில் குண்டுமழை பொழிந்த வண்ணம் இருக்கிறது. மரியுபோல் நகரில் மட்டும் 100 குண்டுகள் வீசப்பட்டதாக உக்ரைன் கூறியுள்ளது. இதில் 2,187 பேர் இதுவரை உயிரிழந்திருப்பதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. மேலும் மின்சாரம், உணவு, குடிநீர் இன்றி ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவான வெளிநாட்டு வீரர்கள் 180 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக ரஷ்யா தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனை விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கவில்லை என்றால், நேட்டோ நாடுகள் மீதும் ரஷ்யாவின் குண்டுகள் விழும் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில் போரை நிறுத்தவது தொடர்பாக உக்ரைன் - ரஷ்யா இடையே இன்று காணொளி வாயிலாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இதையும் படிக்க: 'இன்னொரு மேயரையும் ரஷ்யா கடத்திவிட்டது' உக்ரைன் குற்றச்சாட்டு

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com