
உடுமலைப்பேட்டையை அருகே ஆம்னி பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
உடுமலைப்பேட்டையை அடுத்த ராகப்பாவி பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் மார்த்தாண்டத்திலிருந்து கோவை நோக்கி வந்த ஆம்னி பஸ்சும், கோவையிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்தவேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். காயமடைந்தவர்களை கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.