அரியலூர் மாவட்டம் குழுமூரில் மாணவி அனிதாவின் உடலுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி, ரூ.10லட்சம் நிதி வழங்கினார்.
‘நீட்’ தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடிய அனிதா, தனது மருத்துவ கனவு தகர்ந்ததால் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனிதாவின் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குழுமூரில் வைக்கப்பட்டுள்ளது.
அவர் உடலுக்கு திருமாவளவன், டிடிவி தினகரன், முத்தரன், சுபவீ, கீ.வீரமணி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பா.ரஞ்சித், அமீர், பாண்டிராஜ் உள்ளிட்ட சினிமா துறையினர் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் ஏராளமானோர் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், இரவு 10 மணியளவில் குழுமூரில் மாணவி அனிதாவின் உடலுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின்னர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் திமுக சார்பில் அனிதாவின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “மத்திய, மாநில அரசுகள் தவறான தகவல்களை அளித்தன. நல்ல செய்தி வரும் என்று தமிழக அரசு கூறி வந்தது. மாநில அரசுகளை சேர்ந்தவர்கள் பதவிகளை காப்பாற்றவே டெல்லிக்கு சென்று வந்திருக்கிறார்களே தவிர நீட் பிரச்சனையில் இருந்து காப்பாற்ற அல்ல. மத்திய அமைச்சராக இருந்த சீதாராமன் சமீபத்தில் தமிழகத்தின் மசோதா எங்கிருக்கிறது என்றே தெரியாது என்று கூறினார். ஆனால் சில தினங்களுக்கு ஓராண்டுக்கு விலக்கு கேட்டால் ஒத்துழைக்க தயார் என்று கூறினார். நீட் தேர்வில் விலக்கு கிடைத்து இருந்தால் அனிதாவுக்கு மருத்துவத்தில் இடம் கிடைத்திருக்கும்” என்றார்
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி