Published : 13,Mar 2022 09:29 AM

திமுக கவுன்சிலர் 2 வாக்குகள் பதிவு செய்ததாக வழக்கு - தேர்தல் ஆணையர் விளக்கமளிக்க உத்தரவு

The-district-court-has-ordered-the-state-election-commissioner-to-appear-in-person-in-the-case-of-DMK-councilor-registering-2-votes-in-the-urban-local-body-elections-near-Trichy

திருச்சி அருகே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் , திமுக கவுன்சிலர் 2 வாக்கினை பதிவு செய்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியில், 56-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட மஞ்சுளா தேவி என்பவர் இரண்டு இடங்களில் வாக்குப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது. 646-வது வாக்குசாவடியில் தனது வாக்கினை பதிவு செய்த மஞ்சுளா தேவி, 647-வது வாக்குசாவடியில் முத்துலட்சுமி என்பவரின் வாக்கினையும் பதிவு செய்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அவரின் வெற்றியை, செல்லாது என்று அறிவிக்கக்கோரி எதிர்க்கட்சியினர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

image

இதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாநில தேர்தல் ஆணையர் ஜூன் 10-ம்தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: 2024 தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளிடம் உள்ள வாய்ப்புகள் என்ன? - அலசல்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்