"சர்வதேச சட்டங்களை மீறி வருகிறது உக்ரைன்" - பிரான்ஸ் அதிபரிடம் புடின் குற்றச்சாட்டு

"சர்வதேச சட்டங்களை மீறி வருகிறது உக்ரைன்" - பிரான்ஸ் அதிபரிடம் புடின் குற்றச்சாட்டு
"சர்வதேச சட்டங்களை மீறி வருகிறது உக்ரைன்" - பிரான்ஸ் அதிபரிடம் புடின் குற்றச்சாட்டு

சர்வதேச சட்ட விதிகளை உக்ரைன் மீறி வருவதாக பிரான்ஸ் அதிபர் மற்றும் ஜெர்மனி பிரதமரிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்தும் விதமாக விளாடிமிர் புடினை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் ஆகியோர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்களிடம், உக்ரைன் ராணுவம் அங்கு மிகப்பெரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக விளாளிடிர் புடின் கூறினார். உக்ரைன் மக்களை மனிதக் கேடயமாக அந்நாட்டு ராணுவத்தினர் பயன்படுத்தி வருவதாக கூறிய புடின், இந்த அடக்குமுறைகளை எதிர்ப்பவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

அதேபோல, மழலையர் பள்ளிகள் அருகே உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை குவித்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டிய புடின், இவ்வாறு சர்வதேச சட்டங்களை மீறி உக்ரைன் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, உக்ரைனின் நடவடிக்கைகள் தான் போர் தொடர காரணம் என்றும் விளாடிமிர் புடின் கூறியதாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com