Published : 12,Mar 2022 07:35 PM
ஓன்றன் பின் ஒன்றாக மோதிய வாகனங்கள்: பாலாற்று பாலத்தில் போக்கவரத்து நெரிசல்

செங்கல்பட்டு மாவட்டம் பாலாற்று பாலத்தின் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், 3 கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
செங்கல்பட்டு மாவட்டம் இருகுன்றப்பள்ளி மற்றும் மாமண்டூர் இடையே உள்ள பாலாற்று பாலத்தின் மீது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் சாலையில், தென் மாவட்டத்திற்கு அதிக அளவில் வாகனம் செல்கின்றன.
இந்நிலையில், சாலையில் சென்ற அரசு பேருந்து மீது பின்னால் வந்த வாகனம் மோதியதை அடுத்து ஒன்றன் பின் ஒன்றாக மூன்று வாகனங்கள் மோதியது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.
கடும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று கிலோ மீட்டர் வரை அணிவகுத்து நின்றன. விபத்துக்குள்ளான வாகனத்தை போலீசார் உடனடியாக அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். இதனால் சுமார் ஒருமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.