Published : 02,Sep 2017 01:29 PM
"விவேகம் படம் மறக்க முடியாத அனுபவம்" : பிரஞ்சு நடிகர் புகழாரம்

பிரான்ஸ் நடிகர் செர்ஜ் க்ரோஜோன் விவேகம் படத்தை 3 முறை பார்த்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய விவேகம் படம் ரிலீசான பிறகு கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் விவாகம் படத்தில் அஜீத்துடன் இணைந்து முக்கிய பாத்திரத்தில் நடித்த பிரான்ஸ் நடிகர் செர்ஜ் க்ரோஜோன், விவேகம் படத்தை மூன்று முறை பார்த்ததாகவும் அந்த அனுபவங்களை பற்றியும் தனது ட்விட்டர் பக்கத்தில்," நான் விவேகம் படத்தை நண்பர்களுடன், பொதுமக்களுடன், குடும்பத்துடன் என மூன்றுமுறை பார்த்தேன். இந்தப்படத்தில் நானும் நடித்திருப்பதற்காக பெருமைப்படுகிறேன். அருமையான டீம். வில்லனாக விவேக் ஓபராய் மிகத்திறமையாக நடித்துள்ளார். நீங்கள் நடிக்கவுள்ள பிரஞ்சு படத்தில் நானும் இணைந்து நடிப்பேன் என நம்புகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.