Published : 11,Mar 2022 12:17 PM

’ரத்த கறையுடன் உக்ரைன் கர்ப்பிணி இருப்பதுபோல் போலி புகைப்படம்' - நீக்கியது ட்விட்டர்!

Russia-says-pic-of-injured-pregnant-woman-in-Ukraine-attack-is-fake-calls-her-actor

காயமடைந்த கர்ப்பிணிப் பெண்ணின் புகைப்படம் போலியானது என்றும் அப்பெண் ஒரு நடிகை என்றும் ரஷ்ய தூதரகம் கூறியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் இரண்டு வாரங்களை கடந்துள்ளது. இந்த இரண்டு வாரங்களில் இந்த தாக்குதல் குறித்த செய்திகள் மலைபோல் சமூக ஊடங்கங்களில் குவிக்கப்பட்டுள்ளன. இதில், ஏராளமான போலி செய்திகளும் வெளியான வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உக்ரைனுக்கு ஆதரவாக ஏராளமான போலி செய்திகள் பதிவிடப்பட்டு வருகிறது. சில போலி செய்திகளை உண்மையென நம்பி முன்னணி ஊடங்கங்களும் வெளியிட்டு பின்னர் அதனை நீக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் தான் உக்ரைன் தொடர்பான போலி செய்தி ஒன்று வெளியாயுள்ளது. உக்ரைனின் மரியுபோல் நகரிலுள்ள மகப்பேறு மருத்துவமனையில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 3 போ் உயிரிழந்ததாக அந்த நகர சபை நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்தது. 'மருத்துவமனை மீதான இந்த நேரடி தாக்குதல் உக்ரேனியர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கான இறுதி ஆதாரம்' என்று அதிபர் செலென்ஸ்கி விவரித்தார்.

image

இந்தத் தாக்குதலில், குழந்தை பேறுக்காக காத்திருந்த பெண் ஒருவர் காயமடைந்தது போன்று ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகியிருந்தது.   இந்நிலையில் கர்ப்பிணிப் பெண்ணின் புகைப்படம் போலியானது என்றும் அப்பெண் ஒரு நடிகை என்றும்  இங்கிலாந்தில் உள்ள ரஷ்ய தூதரகம் ட்வீட் செய்துள்ளது. ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த பதிவை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது.

இதையும் படிக்கலாம்: உக்ரைன் போர் எதிரொலி: ரஷ்யாவில் சேவையை நிறுத்திய சோனி மியூசிக்


சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்