Published : 10,Mar 2022 08:00 PM
தோனி டூ ராஜவர்தன்.. தீவிர வலைப் பயிற்சியில் சிஎஸ்கே வீரர்கள் - புகைப்படத் தொகுப்பு

எதிர்வரும் 26-ஆம் தேதி டி20 கிரிக்கெட் லீக் தொடரான 15-வது ஐபிஎல் சீசன் ஆரம்பமாக உள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்கின்றன. இந்த போட்டி மும்பை - வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கு ஆயத்தமாகும் வகையில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூரத் நகரில் பயிற்சிக்காக முகாமிட்டுள்ளது.
சூரத்தில் உள்ள லாலாபாய் காண்ட்ராக்ட்ர் ஸ்டேடியத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது சென்னை அணி. அணியின் கேப்டன் தோனி, சீனியர் வீரர்கள் உத்தப்பா, ராயுடு உட்பட அணியில் புதிதாக இணைந்துள்ள ராஜவர்தன் மற்றும் பலர் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 7-ஆம் தேதி முதல் சென்னை அணி பயிற்சி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இந்த பயிற்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ தொகுப்புகள் சில...
படம் நன்றி: CSK