Published : 09,Mar 2022 04:20 PM

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் படையில் இணைந்து சண்டையிட்டு வந்த நடிகர் உயிரிழப்பு

ரஷ்ய படையினருக்கு எதிராக களத்தில் இறங்கி சண்டையிட்டு வந்த உக்ரைன் நடிகர் உயிரிழந்திருக்கிறார்.

image

உக்ரைன் மீது கடந்த இரண்டு வாரங்கள் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் சில முக்கியமான நகரங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கில் அந்நகரை ரஷ்ய படையினர் பீரங்கிகளுடன் சுற்றி வளைத்துள்ளனர். இந்த சூழலில், ரஷ்ய ராணுவத்தினருக்கு எதிராக உக்ரைன் மக்களும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தி போரிட்டு வருகின்றனர். நாடாளுமன்ற எம்.பி. முதல் ஐ.டி. ஊழியர்கள் வரை போர்க்களத்தில் ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக சண்டையிட்டு வருகிறார்கள்.

image

அந்த வகையில், உக்ரைனைச் சேர்ந்த திரைப்பட நடிகரான பஷா லீ (33) என்பவரும் ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவத்தில் இணைந்து சண்டையிட்டு வந்தார். இந்நிலையில், இர்பின் நகரில் ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிட்ட போது, குண்டுவெடிப்பில் சிக்கி அவர் இன்று உயிரிழந்தார். தான் இறப்பதற்கு 48 மணிநேரத்துக்கு முன்பாக, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்த பஷா லீ, "ரஷ்யாவின் இந்த பயங்கர தாக்குதலை உக்ரைனால் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் புன்னகைக்கிறோம்" எனக் கூறியிருந்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்