’அஜித் 61’ படத்தின் பூஜை இன்று நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைந்துள்ளனர். நாயகியாக நயன்தாரா அல்லது அதிதி ராவ் நடிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ‘அஜித் 61’ படத்தின் பூஜை இன்று நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் மார்ச் 19 ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் படப்பிடிப்புத் துவங்கவுள்ளது. இதற்காக, பிரம்மாண்ட அரங்கை ’அஜித் 61’ படக்குழுவினர் அமைத்துள்ளனர். விரைவில் படப்பிடிப்பை முடித்து ’அஜித் 61’ படத்தினை வரும் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள்.
இப்படத்தில் ‘பிக்பாஸ்’ கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் படம் வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி உருவாகவுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. ’மங்காத்தா’ படத்திற்குப் பிறகு அஜித், இப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 25 கிலோ எடையை குறைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று மாலைக்குள் பூஜை படங்களும் ‘அஜித் 61’ படத்தின் டைட்டிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
மகாராஷ்டிராவில் அதிரடி - பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவு
பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை கூடாது - முகமது ஜுபைர் விவகாரத்தில் ஐ.நா. கருத்து
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix