Published : 09,Mar 2022 01:06 PM
உ.பி தேர்தல்: இ.வி.எம் எந்திரங்களை எடுத்துச் சென்றது ஏன்? காரணம் கூறிய தேர்தல் அதிகாரி

உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் விதிகளுக்கு எதிராக, EVM இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருந்த நிலையில், அவை பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்களே என தேர்தல் அதிகாரிகள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்பு அறையில் இருந்த EVM இயந்திரங்களை சம்பந்தப்பட்ட தொகுதி வேட்பாளர்களுக்கு முன்அறிவிப்பு ஏதும் வழங்காமலேயே அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த வாகனத்தை முற்றுகையிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தேர்தல் அதிகாரிகள் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் எடுத்துச் செல்லப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் பயிற்சிக்கு வழக்கமாக பயன்படுத்தப்படுபவை எனவும், தவறான தகவலின் பேரில் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வாகனத்தை முற்றுகையிட்டுவிட்டதாக தேர்தல் அதிகாரி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்தி:உக்ரைன் - ரஷ்யா போரின் கோரமுகம்: தந்தையை பிரிய முடியாமல் தவிக்கும் குழந்தை