Published : 02,Sep 2017 04:21 AM

என்னை மட்டும் ஏன் அப்படி கேட்கிறாங்க? சன்னி லியோன் வருத்தம்

Sunny-Leone-wants-to-cut-down-on-item-songs

சினிமாவில் மற்ற நடிகைககள் செய்யாதது எதையும் நான் செய்யவில்லை என்று நடிகை சன்னி லியோன் கூறியுள்ளார்.

தமிழில் ’வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியவர் சன்னி லியோன். இந்தியில் நடித்துவரும் அவருக்கு, அங்கு ஒரு பாடலுக்கு ஆடத்தான் அதிக வாய்ப்புகள் வருகிறது. கடந்த வருடம் 5 படங்களில், ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இப்போது சஞ்சய் தத் நடிக்கும் ’பூமி’ படத்தில் ஆடியுள்ளார். இதையடுத்து இனி, ஒரு பாடலுக்கு ஆடப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளார் சன்னி.
‘நான் நடிக்கும் படங்களில் அதிக கிளாமர் இருப்பதாக சொல்கிறார்கள். நான் செக்ஸியாக நடனம் ஆடுவதாகவும் பேசுகிறார்கள். மற்ற நடிகைகள், படங்களில் செய்யாதது எதையும் நான் செய்துவிடவில்லை. ஆனால், என்னை மட்டும் ஏன் இப்படி கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் இனி ஒரு பாடலுக்கு ஆடுவதை குறைத்துக்கொண்டு நடிப்பில் கவனம் செலுத்த போகிறேன். எனது நடிப்பின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது’ என்கிற சன்னி, தனது கணவர் டேனியலுடன் இணைந்து விரைவில் படம் தயாரிக்கவும் இருக்கிறார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்