[X] Close

இன்னும் 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழை

Rain-in-tamilnadu

அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கைக்கு அருகே வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்காரணமாக, தமிழகத்தில் வளிமண்டலத்தின் ஈரப்பதத்துடன் கூடிய கிழக்குதிசைக் காற்று வீசுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என்றும், தென் மற்றும் வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு முறை மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 


Advertisement

Advertisement
[X] Close