[X] Close

கிரிக்கெட்டின் ஆபரணம் தோனி: ரவி சாஸ்திரி

MS-Dhoni-is-not-even-half-finished-yet--Ravi-Shastri

தனது கிரிக்கெட் வாழ்க்கையை தோனி, இன்னும் பாதி கூட நிறைவு செய்யவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சொன்னார்.


Advertisement

2019 -ல் நடக்க இருக்கும் உலக கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கு இளம் வீரர்களை தயார்படுத்தும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மூத்த வீரர்கள் ஓரம் கட்டப்பட்டு வருகின்றனர். அதனால் தோனி, உலகக் கோப்பை வரை நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்தக் கேள்விகளை தூளாக்கும் விதமாக, அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தவிர்க்க முடியாத வீரர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’இந்திய அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர் தோனி. டிரெஸ்சிங் ரூமில் அவர், வாழும் ஒரு ஜாம்பவான். கிரிக்கெட் விளையாட்டின் ஆபரணம் அவர். இப்படிப் புகழ்வதால் அவரது கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வருவதாக கற்பனை செய்ய வேண்டாம். அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை பாதி கூட நிறைவு செய்யவில்லை. அவர் சாதிக்க இன்னும் நிறைய இருக்கிறது.
அனுபவம் வாய்ந்த தோனி, அணிக்கு அதிக பங்களிப்பை அளித்திருக்கிறார். இன்னும் சிறப்பாக ஆடிகொண்டிருக்கும் அவருக்கு பதிலாக வேறு வீரரை எப்படி தேர்வு செய்ய முடியும்?’ என்றார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close