Published : 06,Mar 2022 12:00 PM

"அவங்கள நிறுத்த சொல்லுங்க " - உக்ரைன் கோரிக்கை

Russia-must-be-asked-to-stop-the-attack-says-Ukraine

தங்கள் நாட்டு மாணவர்களை மீட்க வசதியாக தாக்குதலை நிறுத்த ரஷ்யாவை இந்தியா உள்ளிட்ட நாடுகள் கேட்டுக்கொள்ள வேண்டும் என உக்ரைன் தெரிவித்துள்ளது

உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்டுள்ள தாக்குதல் 2ஆவது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் உக்ரேனிய வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா அந்நாட்டு தொலைக்காட்சியில் பேசினார். ரஷ்யா சண்டை நிறுத்த உறுதிமொழியை மீறி தாக்குதல் நடத்தி வருவதாக அமைச்சர் டிமிட்ரி குலேபா குற்றஞ்சாட்டினார். கடந்த 30 ஆண்டுகளாக ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாட்டு மாணவர்கள் தங்கள் நாட்டில் கல்வி கற்று வருவதாகவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை தங்கள் அரசு செய்து வருவதாகவும் உக்ரைன் அமைச்சர் தெரிவித்தார்.

image

ஆனால் அந்த மாணவர்களை உக்ரைன் அரசு தற்போது பாதுகாக்கவில்லை எனக் கூறி பிரச்னையை தங்களுக்கு சாதகமாக திரித்துக்கூறி வருவதாகவும் அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்தார். இந்த சூழலில் தங்கள் நாட்டு மாணவர்களை மீட்கும் வகையில் சண்டையை நிறுத்தும்படி ரஷ்யாவை இந்தியா, சீனா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் கேட்டுக்கொள்ள வேண்டும் என உக்ரைன் அமைச்சர் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்