மீண்டும் இணையும் சூர்யா - சுதா கொங்கரா: அசத்தலாக அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்

மீண்டும் இணையும் சூர்யா - சுதா கொங்கரா: அசத்தலாக அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்
மீண்டும் இணையும் சூர்யா - சுதா கொங்கரா: அசத்தலாக அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்

’சூர்யா - சுதா கொங்கரா கூட்டணி மீண்டும் இணைகிறது’ என்று அப்டேட் கொடுத்திருக்கிறார் நடிகர் ஜி.வி பிரகாஷ்.

ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்துள்ள ‘செல்ஃபி’ வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இதனையொட்டி, ஜிவி பிரகாஷ் இன்று ட்விட்டர் லைவ்வில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். சுதா கொங்கரா - சூர்யாவின் அடுத்தப் படம் குறித்து ரசிகர்கள் கேட்டக் கேள்விக்கு “கண்டிப்பா இருவரும் இணைகிறார்கள். இந்த வருட இறுதிக்குள் அறிவிப்பு வரலாம். அதற்காக ஒர்க் பண்ணிக்கொண்டு வருகிறார்கள்” என்று கூறியுள்ளார். இதனால், சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ‘சூரரைப் போற்று’ படத்தில் ஜி.வி பிரகாஷ்தான் இசையமைத்திருந்தார். பாடல்கள் ஹிட் அடித்ததால் இந்தக் கூட்டணி எப்போது இணையும் என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தார்கள் ரசிகர்கள். தற்போது, ‘சூரரைப் போற்று’ படத்தினை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் சுதா கொங்கரா. இந்தப் படத்தை முடித்தப் பிறகே சூர்யாவுடன் இணையவுள்ளார். மேலும், ஜிவி பிரகாஷ் சூர்யா - பாலா இணையும் படத்திற்கு பாடல்களை முடித்துவிட்டதாகவும், சுதா கொங்கரா அஜித்துடன் இணைய வாய்ப்பிருக்கிறது என்றும் அப்டேட்களை அள்ளி வீசியிருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com