கேரள முதலமைச்சர் பினராய் விஜயனுடன் நடிகர் கமல்ஹாசன் இன்று சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்பு கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயனின் க்ளிப் ஹவுஸ் இல்லத்தில் நடைபெற்றது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கமல் கேரள முதல்வர் வீட்டிலேயே விருந்து சாப்பிட்டார். இதுகுறித்து கமல் கூறுகையில்,’கடந்த ஆண்டு ஓணத்தின்போதே முதல்வரை சந்திப்பதாக இருந்தது. சிறு விபத்தில் நான் அப்போது சிக்கிக்கொண்டதால் பங்கேற்க முடியவில்லை. எனவே இந்த வருட ஓணத்திற்கு வந்துள்ளேன். இது அரசியல் டூர்.
தமிழக அரசியலுக்கு கேரள அரசியலில் இருந்து ஏதாவது பாடத்தை கற்க முடியுமா என்ற ஆர்வத்தில் இதை ஒரு அரசியல் சுற்றுலா போலவும் மேற்கொண்டுள்ளேன். இங்கு சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவித்தார். இந்த சந்திப்பில் அரசியல் விவகாரங்கள் குறித்து பேசப்பட்டிருக்கலாம், தனது அரசியல் பிரவேசம் குறித்து பினராயி விஜயனிடம் கமல் ஆலோசித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கமல் தெரிவிக்கும் கருத்துகளுக்கு பினராயி விஜயன் எப்போதும் ஆதரவு தெரிவித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் இவர்களது சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது எனக் கூறப்படுகிறது.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!