Published : 01,Sep 2017 01:11 PM
நல்ல மருத்துவரை இழந்துவிட்டோம்: அனிதா தற்கொலை குறித்து கமல் வேதனை!

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், “மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது மனவேதனை அளிக்கிறது. கனவுடன் வாழ்ந்த அனிதாவை மண்ணுடன் புதைத்துவிட்டனர். திருமாவளவன் உள்ளிட்டோர் வெகுண்டெழ வேண்டும். மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதால் நல்ல மருத்துவரை இழந்துவிட்டோம். இதுபோன்ற துயரம் இனி நிகழக்கூடாது. நீட்டுக்கு எதிராக பேச வேண்டியவர்கள் எல்லாம் பேரம் பேசிக் கொண்டிருந்தால் மக்கள் எப்படி வாழ்வார்கள். தமிழக அரசியல் நிலவரம் மிக வேடிக்கையாக உள்ளது. எந்த பக்கமும் நான் சாய மாட்டேன்” என்று கூறினார்.
மேலும், “அனிதா என்னுடைய மகள். அவளுக்காக நான் குரல் கொடுப்பேன். இந்த மாதிரி தற்கொலை இனியும் தொடர்ந்தால்தான் உங்களால் பாடம் கற்க முடியும் என்றால், வேண்டாம் நாங்களே கற்றுக் கொள்கிறோம். கற்றுக் கொடுக்கிறோம். மனம் தளரக்கூடாது என்ற தமிழக அரசின் அறிவுரையை ஏற்றுக் கொள்கிறோம், ஆனால் அவர்களுக்கு போராட்டத்திற்கு நேரம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. மக்கள்தான் இறங்க வேண்டும். வேண்டுமென்றால் தமிழக அரசும் அவர்களுடன் இணைந்து கொள்ள வேண்டும். கட்சி, ஜாதி, மதம் என்ற எந்த பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பினரும் நீதிக்காக போராட வேண்டும். உச்சநீதிமன்றத்தில் சரியாக வாதாட வேண்டும். தமிழக அரசு சரியாக வாதடவில்லை என்றே தெரிகிறது. நான் வழக்கறிஞரின் மகன்” என்று கமல் கூறினார்.