Published : 04,Mar 2022 04:21 PM

ஆர்.ஜே. பாலாஜி - ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் புதிய படம்

RJ-Balaji-and-Aishwarya-Rajesh-joins-in-a-new-Tamil-film

மலையாளத்தில் வெளியாகி வெற்றியடைந்த 'தியான்' படத்தின் இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கும் தமிழ் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி - ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஆர்.ஜேவாக இருந்து நகைச்சுவை நடிகராக உயர்ந்த ஆர்.ஜே. பாலாஜி தற்போது, தனக்கேற்ற கதைகளை தேர்வு செய்து நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்த 'எல்.கே.ஜி', 'மூக்குத்தி அம்மன்' ஆகிய படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றன.

இதையடுத்து ’வீட்ல விசேஷங்க’ என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். அந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மலையாள இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் தமிழில் இயக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

image

image

அந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியாக நடிக்கிறார். அதேபோல் ஆர்.ஜே பாலாஜி ஜோடிக்கான நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் டார்க் காமெடி திரில்லர் வகையில் உருவாகிறது. இதற்கான பூஜை சென்னையில் இன்று நடைபெற்று முடிந்த நிலையில், வருகிற 23-ஆம் தேதி சென்னையில் படப்பிடிப்பை தொடங்குகின்றனர். ஆர்.ஜே.பாலாஜி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதே நிறுவனம் கார்த்தியின் ‘சர்தார்’ படத்தை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்