Published : 03,Mar 2022 07:40 PM

"வெளிநாட்டினரை வெளியேற விடாமல் உக்ரைன் தடுக்கிறது" - ரஷ்யா குற்றச்சாட்டு

Ukraine-prevents-foreigners-from-leaving--Russia-accuses

உக்ரைனிலிருந்து வெளிநாட்டினரை வெளியேற விடாமல் அந்நாட்டு அரசு தடுப்பதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

உக்ரைனில் நுழைந்து 8ஆவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. அதனால், அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டினர் எல்லையோர நகரங்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். அவர்கள் வெளியேறுவதற்கு உக்ரைன் அரசு மறுப்பு தெரிவித்து வருவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

image

கார்கிவ் பகுதியிலிருந்து வெளியேற ரயில்களில் வெளிநாட்டினரை உக்ரைன் காவலர்கள் அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், தங்களுக்கு எதிராக தெளிவான போர் திட்டங்களை உக்ரைன் வகுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்